- நன்றி தினமணி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு இந்த வலைப்பதிவை உருவாக்கி பேணி வருகிறது. இந்த வலைப்பதிவில் தமுஎகச குமரி மாவட்டக்குழு ஒப்புதல் பெற்ற படைப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
திங்கள், 21 நவம்பர், 2011
எம்.வி. வெங்கட்ராம் நினைவு தமிழ்ச் சிறுகதைப் போட்டி
தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அன்னை திறனேற்றப் பயிற்சித் திண்ணை (அதிதி) அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அவ்ராம்அமி அறக்கட்டளை, அதிதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து எம்.வி. வெங்கட்ராம் நினைவு தமிழ்ச் சிறுகதைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் எம்.வி. வெங்கட்ராம். 1993-ல் இவர் எழுதிய "காதுகள்' என்ற புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.மேலும், விக்ரஹநிவாசன் என்ற புனைபெயரில் இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். 14.1.2000-ல் மறைந்த எம்.வி. வெங்கட்ராம் நினைவாக நடத்தப்படவுள்ள இந்தப் போட்டியில், "வீடே மறுவாழ்வு இல்லம், பெற்றோரே மறுவாழ்வு நிபுணர், ஊரே மறுவாழ்வு இல்லம்' என்னும் கருத்தை மையமாக வைத்து, சொந்தக் கற்பனையில் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.6 முதல் 8 பக்கங்கள் வரை சிறுகதை எழுதப்பட்டு இருக்கலாம். சிறுகதை எழுதியவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன், சிறுகதைகளை நவம்பர் 30-க்குள் அனுப்ப வேண்டும். ஒருவர் 3 சிறுகதைகள் சமர்ப்பிக்கலாம். மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் சிறுவர் சிறுகதைகளை அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறுகதைகளுக்கு ஜனவரி 26-ல் நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும். சிறுகதையை, அதிதி அறக்கட்டளை, 142, கீழவெளி வீதி, மதுரை- 625 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)