தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு இந்த வலைப்பதிவை உருவாக்கி பேணி வருகிறது. இந்த வலைப்பதிவில் தமுஎகச குமரி மாவட்டக்குழு ஒப்புதல் பெற்ற படைப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
சனி, 21 மே, 2022
தமுஎகச 15வது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா மார்த்தாண்டம், 21-05-2022
தமுஎகச 15வது மாநில மாநாடு
வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வருகிற ஆகஸ்ட் 12, 13, 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாநாடு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு விழா 21-15-2022, சனிக்கிழமை மாலை மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் டெல்பின் தலைமை வகித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி மோகன், மார்த்தாண்டம் தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் அல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் தக்கலை ஹலீமா வரவேற்றார். தக்கலை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கணேசன் வரவேற்புக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவோம், சாதி உணர்வுகளை மறுப்போம் மறப்போம், தமிழர்களின் வரலாறும் பெருமையும், பஞ்சபூதங்களின் அடிப்படையில் நம் உடல் நலம் ஆகிய நூல்களை எழுதியுள்ளேன்.
ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைய அனைவரும் உழைக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்காகத்தான் இளையத் தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களை சத்தித்து பேசி வருகிறேன்.
மேலும், இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்காமல்
இருக்கச் செய்ய வேண்டியது குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன் எனப்
பேசினார்.
நிகழ்ச்சியில் தமுஎகச மாவட்டச் செயலாளர் ஹசன் நன்றி கூறினார்.
விழாவில், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், மாநாட்டு வரவேற்புக்குழு பொருளாளர் முரளீதரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மிகையிலான், விடியல் குமரேசன், வினோத், ஜாண் இளங்கோ, இருதயராஜ், முரசு ஆனந்த், அருள் மனோ, டயானா, குமரித் தோழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆன்றணி ஜோசப், அலக்ஸ், அனு மோன், அலிக்கான் குழித்துறை நகர்மன்ற உறுப்பினர் சர்தார் ஷா, தமுஎகச மார்த்தாண்டம் கிளைத் தலைவர் ரெத்தினகுமார், செயலாளர் சேக் முகமது, உதவித் தலைவர் கணபதி, உதவிச் செயலாளர் டேவிட், ஜாகிர் உசேன், அணில் குமார், வேலாயுதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், பாகோடு கூட்டுறவு சங்க தலைவர் வின்சென்ட், விஜய மோகனன், வழக்கறிஞர் அனந்த சேகர், நல்லூர் வட்டாரச் செயலாளர் ஜாண் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள்:



