மாபெரும் ஓவியப் போட்டி
தமுஎகச 15வது மாநில மாநாடு ஆகஸ்ட் 12, 13, 14, 15 தேதிகளில் மார்த்தாண்டத்தில் நடைபெறுவதையொட்டி மாபெரும் ஒவியப்போட்டி 17-07-2022 ஞாயிற்றுகிழமை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஓவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் தலைப்பு,
தனித்துவம் நமது உரிமை
பன்மைத்துவம் நமது வலிமை
முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்தை
சேலத்தைச் சேர்ந்த ஓவியர் ஜீவகன் பெற்றார்.
இரண்டாம் பரிசு ரூபாய் ஐம்பதாயிரத்தை
சென்னையைச் சேர்ந்த ஓவியர் சதீஸ்ராஜா பெற்றார்.
இரண்டாம் பரிசு பெற்ற ஓவியம்
மூன்றாம் பரிசு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை
புதுக்கோட்டையைச் சேர்ந்த
ஓவியர் பிரவீன் குமார் பெற்றார்.
மூன்றாம் பரிசு பெற்ற ஓவியம்

















































