திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குமரி மாவட்ட 11-வது மாநாடு

30 – 07 – 2011, மஞ்சாலுமூடு

தமுஎகசவின் 11-வது குமரி மாவட்ட மாநாடு மஞ்சாலுமூட்டில் கார்த்திகேசு சிவதம்பி நினைவரங்கத்தில் (பந்தல்விளை காமராஜர் மேல்நிலைப் பள்ளி) நடைபெற்றது. பிரதிநிதிகளாக 29 கிளைகளிலிருந்து 151 பேர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் வருகை தாமதம் காரணமாக மாநாடு துவக்கம் திட்டமிட்டபடி 9 மணிக்கு துவங்க இயலவில்லை.

இம்மாநாட்டுக்கு ஜெ.எம் ஹசன், ரெகுபதி, கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழு தேர்வு செய்யப்பட்டது.

மத்தியாஸ், அருள் மனோ, சிவஸ்ரீ ரமேஷ் ஆகியோரைக் கொண்ட மினிட் குழுவும் செயல்பட்டது. தோழர். ஜெயக்குமார் வரவேற்றார்.

தோழர். ஜாண் இளங்கோ அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய மாநாட்டு பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அஞ்சலி தீர்மானத்தில் மறைந்த நாடக கலைஞர் பாதல் சர்க்கார், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், ராமச்சந்திரன், பிரபல ஓவியர்கள் எம்.எப் ஹூசைன், கே.சி.எஸ் பணிக்கர், இலக்கியவாதியும் விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி, திரை நடிகர் ரவிசந்திரன், கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், முற்போக்குவாதிகள் மற்றும் இயற்கை சீற்றம் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர் வானமாமலை துவக்கவுரை யாற்றினார். இவ்வுரை இன்னமும் எழுச்சிகரமாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பேரா. கணேசன் செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டப் பொருளாளர் கு. சந்திரன் பொருளாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். இவ்வறிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கீழ்கண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

Ø தமுஎகச சார்பில் தொலைக்காட்சி சானல் துவங்க வேண்டும்.

Ø கலை நிகழ்ச்சிகளை கிராமங்களில் நடத்த வேண்டும். இதன் மூலம் கிராமங்களில் மங்கிக்கிடக்கும் கலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.

Ø குறும்படங்கள், ஆவணப்படங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும்.

Ø தற்போது காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல்பத்திரிகையை மாத இதழாக வெளிக் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும்.

Ø பள்ளிக் கல்லூரிகளில் அறிவியல் மன்றங்கள் செயல்படுவதைப் போல தமுஎகச கலை மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு கலைப் பயிற்சிகள் கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.

Ø நமது செயல்பாடுகள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளிவர தகுந்த முயற்சிகள் எடுக்க வேண்டும்.

Ø தமுஎகசவில் பெண்களை அதிகளவில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

Ø செம்மலர் பத்திரிகைக்கான சந்தா எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

மாவட்டச் செயலாளர் அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்கினார்.

பேரா. வி. பொன்னுசாமி, மஞ்சாலுமூடு ஊராட்சி தலைவர் செல்வன், ஆர்டிஸ்ட் விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஜெ.வெனிஸின் மண்ணின் தாகம் என்ற இசைப்பாடல் தொகுப்பை மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட கவிஞர் வானமாமலை பெற்றுக் கொண்டார்.

நாடகக் கலைஞர் கலை முதுமணி இரணியல் கலைத்தோழனின் நெருப்பில் நீராடும் மலர்கள் என்ற வரதட்சனைக் கொடுமைக் குறித்த மேடை நாடக புத்தகத்தை மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட மஞ்சாலுமூடு உதயா ஆர்ட்ஸ் கிளப் இயக்குநர் ஆர்டிஸ்ட் விஜயன் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் உறுமானஸ், கே.பி செல்லப்பா, வெனிஸ், அருள் மனோ, குமரேசன், புதுமைப் பித்தன், இருதயராஜ், ஜெனட் மேரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்கள் பாடினர்.

தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ரோஸ் ராபின் நன்றி கூறினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம்-1: ஐயா வைகுண்டர் குமரி மாவட்டத்தில் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அன்றைக்கிருந்த அரசாட்சியையே எதிர்த்து போராடியவர். இவரது சமூக போராட்டங்களால் எழுச்சி பெற்ற மக்களிடத்தில் அரசுக்கு எதிராக போராடும் துணிச்சல் பிறந்தது. உழைப்பாளி மக்கள் கக்கத்தில் இடுக்கி ஆண்டைகளை கும்பிடும் போக்கை எதிர்த்து தலையில் தலைப்பாகையாக கட்ட மக்களுக்கு தெம்பூட்டியவர். இவ்வாறான சமூக போராளியான ஐயா வைகுண்டர் வரலாற்றை நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு பள்ளிக் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தீர்மானம்-2: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலே நடைமுறைப்படுத்தக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

புதிய மாவட்டக்குழு தேர்வு:

வ.எண்

பெயர்

பொறுப்பு

1

ஜே.எம். ஹசன்

தலைவர்

2

ஜே. ஜெயக்குமார்

செயலாளர்

3

கு. சந்திரன்

பொருளாளர்

4

பேரா. கே. கணேசன்

துணைத் தலைவர்

5

பொன்மனை வல்சகுமார்

துணைத் தலைவர்

6

குமரித் தோழன்

துணைத் தலைவர்

7

பேரா. ஸ்ரீகண்டன்

துணைத் தலைவர்

8

அ. ஜாண் இளங்கோ

துணைச் செயலாளர்

9

ஜே.ஜெயகாந்தன்

துணைச் செயலாளர்

10

அருள் மனோ

துணைச் செயலாளர்

11

விடியல் குமரேசன்

துணைச் செயலாளர்

12

ம. மிக்கேல் ராஜ்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

13

அ. மத்தியாஸ்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

14

இருதயராஜ்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

15

ரோஸ் ராபின்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

16

உறுமான்ஸ்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

17

ஏ. பாபு

மாவட்டக்குழு உறுப்பினர்

18

நாராயணன்

மாவட்டக்குழு உறுப்பினர்

19

பனிப்ரோன்

மாவட்டக்குழு உறுப்பினர்

20

ஆர். மகேஷ்

மாவட்டக்குழு உறுப்பினர்

21

கிருஷ்ணன்

மாவட்டக்குழு உறுப்பினர்

22

மனோ ரஞ்சித தாஸ்

மாவட்டக்குழு உறுப்பினர்

23

சிவ ஸ்ரீரமேஷ்

மாவட்டக்குழு உறுப்பினர்

24

வெனிஸ்

மாவட்டக்குழு உறுப்பினர்

25

சுஜித்

மாவட்டக்குழு உறுப்பினர்

26

ஸ்ரீனிவாசன்

மாவட்டக்குழு உறுப்பினர்

27

கலாசுரன்

மாவட்டக்குழு உறுப்பினர்

28

கே.வி. மணிகண்டன்

மாவட்டக்குழு உறுப்பினர்

29

கமல தாஸ்

மாவட்டக்குழு உறுப்பினர்

30

செல்வராஜ்

மாவட்டக்குழு உறுப்பினர்

31

ஜெயப்பிரகாஷ்

மாவட்டக்குழு உறுப்பினர்

32

டினோ

மாவட்டக்குழு உறுப்பினர்

33

புதுமைப் பித்தன்

மாவட்டக்குழு உறுப்பினர்

34

பியூலா மேரி

மாவட்டக்குழு உறுப்பினர்

35

ஜெனட் மேரி

மாவட்டக்குழு உறுப்பினர்

கலைப் பேரணி

முக்கூட்டுக்கல்லிலிருந்து துவங்கிய கலைப் பேரணியை நாடக இயக்குநர் ஆர்டிஸ்ட் விஜயன் துவக்கி வைத்தார். இதில் 67 பள்ளிக் குழந்தைகள் தேசிய தலைவர்கள் போன்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் விதத்திலும் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

குழந்தைகளின் டப்பு முட்டு என்ற கிராமியக் கலை நிகழ்ச்சி, சிங்காரி மேளம், தப்பாட்டம், நையாண்டி மேளம் போன்றவற்றோடு பல்வேறு கலைஞர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி வந்த பாதையின் இருமருங்கிலும், பொதுமக்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உதறிவிட்டு, கலைப்பேரணியை கண்டு களித்ததோடு பலர் பேரணியில் சங்கமித்தனர்.

கலை இரவு

கலைப்பேரணி கலை இரவு மேடையை வந்தடைவதற்கு முன்பே கரிசல் கருணாநிதி, அருள் மனோ, உறுமான்ஸ், கே.பி செல்லப்பா ஆகியோரின் மண்ணின் மணம் கமழும் பாடல்களுடன் கலை இரவு நிகழ்ச்சி துவங்கியது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். குழந்தைகளின் டப்பு முட்டு என்ற கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைப்பேரணியில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு மாவட்டத் தலைவர் ஜெ.எம் ஹசன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். மஞ்சாலுமூடு சார்வாகபுரி திலகம் வினு பரிசுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

மேல்புறம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் பி. நடராஜன், மஞ்சாலுமூடு ஊராட்சி தலைவர் செல்வன், முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் துளசீதரன் ஆகியோர் கலை இரவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்பிதனர்.

மலையாள திரைப்பட நடிகர் பிரேம் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மலையாள கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநர் கரிவெள்ளூர் முரளி புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

கவிஞர் எஸ்.ஜே ஜோசப்பின் புன்னகை பூவே என்ற கவிதைத் தொகுப்பை கரிவெள்ளூர் முரளி வெளியிட கருங்கல் ஹோலி ஏஞ்சல் ஓவியப் பள்ளி இயக்குநர் ஆர்.மகேஷ் பெற்றுக் கொண்டார்.

கவிஞர் கலாசுரனின் இரும்பு காகத்தின் கதை என்ற கவிதைத் தொகுப்பை கரிவெள்ளூர் முரளி வெளியிட சித்திரம் சிவப்பிரியன் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டு சிறப்பிதழாக வெளிவந்த, தமுஎகச மணலிக்கரைக் கிளையின் எதிர்நீச்சல் காலாண்டிதழை கரிவெள்ளூர் முரளி வெளியிட கிறிஸ்டோபர் பெற்றுக் கொண்டார்.

தமிழ் திரைப்பட நடிகர் கலைமாமணி பாலாசிங் மணலிக்கரை உருவங்கள் தயாரித்த இளையோர் 2012 என்ற ஆவணப்படத்தை வெளியிட புன்னகை சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

மேலும், கவிஞர் குமரித்தோழனின் விடியலைத் தேடும் விதிகள் என்ற கவிதை நூலை கலைமாமணி பாலாசிங் வெளியிட தமுஎகச தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பேரா. கே.கணேசன் பெற்றுக் கொண்டார்.

மாற்று திறனாளியாக இருந்தும் வரலாற்று ஆய்வாளராகவும் சி.என்.ஆர் தொலைக்காட்சி நிறுவனருமாகவும் சாதனை படைத்து வரும் அஸ்கர் அவர்களை பாராட்டி கலைமாமணி பாலாசிங்கால் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

நெடுமங்காடு குரு கிருபா நாடன் கலா கேந்திரத்தின் மகளிர் சிங்காரி மேளம், திருவாதிரைக் களி, சரடுபின்னிக் களி ஆகியன நடைபெற்றன.

நாகர்கோவில் களரி கலைக் குழுமத்தின் தப்பாட்டம், கம்பத்தாட்டம், களியலாட்டம், ஒயிலாட்டம் ஆகியன நடைபெற்றன.

திருநெல்வேலி தோட்டாக்குடி மாரியப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், அம்பாசமுத்திரம் கலைமாமணி சங்கரப்பாண்டி குழுவினரின் காவடியாட்டம், திருவில்லிபுத்தூர், குன்னத்தூர் துர்க்கையாண்டியின் கரகாட்டம், நெல்லை ராஜி - சுப்பிரமணியின் மயிலாட்டம், காளையாட்டம் ஆகியன நடைபெற்றன.

கவிஞர் புலவை சுரேஷ் கவிச்சரம் தொடுத்தார். கலை இரவில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கத்தின் உரைவீச்சும் நடைபெற்றது.

இராஜாக்கமங்கலம் ஸ்ரீ பத்ரகாளி குழுவின் வில்லுப்பாட்டு நடைபெற்றது. மாநாடு வரவேற்பு குழு பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

மாநாடு விளம்பரங்கள்: கீழ்கண்ட எண்ணிக்கையில் தட்டி போர்டுகள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டது.

வ.எண்

பகுதி

எண்ணிக்கை

1

மஞ்சாலுமூடு, அருமனை

9

2

நாகர்கோவில்

2

3

தக்கலை

2

4

மணலிக்கரை

3

5

மார்த்தாண்டம்

2

6

மிடாலக்காடு

1

7

மெதுகும்மல்

1

8

குலசேகரம்

1

9

மேல்புறம்

2

10

மருதங்கோடு

2

11

திக்குறிச்சி

1

12

பாகோடு

1

13

சிதறால்

1

14

குழித்துறை

1

15

பரக்குன்று

2

மொத்தம்

31

மாநாட்டுக்காக 4000 நோட்டீஸ், 300 பல்வண்ண சுவரொட்டிகள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது.

மாநாட்டு அரங்கில் புத்தக கண்காட்சி, கலைப்படைப்புகளின் கண்காட்சி ஆகியன வைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

கலை இரவில் கிளைகள் சார்பில் நாடகங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வெளியீடுகளின் பட்டியல்

வ. எண்

படைப்பின் பெயர்

படைப்பாளியின் பெயர்

படைப்பின் வகை

வெளியீட்டகம்

1

இரும்பு காகத்தின் கதை

கவிஞர் கலாசுரன்

கவிதைத் தொகுப்பு

உருவங்கள் மற்றும் எதிர் நீச்சல் பதிப்பகம்,

மணலிக்கரை

2

நெருப்பில் நீராடும் மலர்கள்

கலை முதுமணி இரணியல் கலைத் தோழன்

மேடை நாடகம்

தாகம் வெளியீட்டகம்,

மிடாலக்காடு

3

விடியலைத் தேடும் விதிகள்

கவிஞர் குமரித் தோழன்

கவிதைத் தொகுப்பு

தாகம் வெளியீட்டகம்,

மிடாலக்காடு

4

புன்னகை பூவே

கவிஞர் எஸ்.ஜே. ஜோசப்

கவிதைத் தொகுப்பு

தாகம் வெளியீட்டகம்,

மிடாலக்காடு

5

மண்ணின் தாகம்

ஜே. வெனிஸ்

இசைப்பாடல் தொகுப்பு

டால்மியா வெளியீட்டகம்,

கோவளம், கன்னியாகுமரி

6

இளையோர் 2012

பெனான்ஸ் - கிறிஸ்டோபர்

ஆவணப்படம்

உருவங்கள்,

மணலிக்கரை

7

எதிர் நீச்சல் – தமுஎகச மாநாட்டு சிறப்பு மலர்

மணலிக்கரை கிளை

சிறப்பிதழ்

எதிர் நீச்சல் பதிப்பகம்,

மணலிக்கரை

கார்த்திகேசு சிவதம்பி பற்றிய குறிப்பு

கார்த்திகேசு சிவதம்பி 1932-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்தவர். இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி (79) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 2011-ம் வருடம் ஜூலை 6-ம் நாள் மாரடைப்பால் காலமானார்.

இவர் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர். அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பண்டைத் தமிழகத்தில் நாடகம்என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் பலதுறை சங்கம ஆய்வுஎன்ற முறையில் அமைந்திருக்கும்.

தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி”, “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்”, “மதமும் மானுடமும்”, “தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்”, “இலங்கைத் தமிழர் யார், எவர்”, “தொல்காப்பியமும், கவிதையும்”, “தமிழ்ப் பண்பாட்டில் சினிமாஉள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இவர் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் ஆவார்.