செவ்வாய், 3 ஜூலை, 2012

குமரியில் திரைப்பயணம் 2


மார்த்தாண்டம் கல்லூரியில் தமுஎகச குறும்பட திரையிடல்

  கல்லூரி முதல்வர் ராய் பேசுகிறார்
  கல்லூரி பேராசிரியர் குமாரசெல்வா பேசுகிறார்
தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
மிக்கேல்ராஜ் பேசுகிறார்

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும் என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறையோடு இணைந்து இந்த திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தமிழ்துறைத் தலைவர் மகிழ் உல்டா கமலம் தலைமை தாங்கினார். பேராசிரியர் குமார செல்வா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராய் வாழ்த்துரை வழங்கினார். தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் குறுந்திரை ஒரு பார்வை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து சென்ஸ், நடந்த கதை, அஃறிணைகள், கிரியா, என்கண்ணே, காற்றில் அலையும் கேள்விகள் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்கள் குறித்து விவாதமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் முதுநிலைத்துறை தலைவர் பிறீடா மேபல் ராணி, பேராசிரியர்கள் சஜன், ஸ்டீபன்சன், தமுஎகச குமரி மாவட்டத் துணைச்செயலாளர் விடியல் குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குமரியில் திரைப்பயணம் 1

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும் என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.


இதன் ஒருபகுதியாக கொட்டாரத்தில் 2012 ஜூன் 30 ம் தேதி மாலை7 மணி முதல் 8.30 வரை டாக்டர் ராஜசேகரன்  வீட்டு வளாகத்தில் திரையிடல் நடைபெற்றது. 
இதற்கு கிளைத்தலைவர் திரு ஏ ஆர் ஜே. கண்ணா அவர்கள் தலைமை வகித்தார்.  கிளைச் செயலாளர் கவிஞர் ஈ.விஜய் அவர்கள் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் க.கணேசன்  அறிமுகவுரையுடன்  பல குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இத் திரையிடல் நிகழ்ச்சியில் டாக்டர் திரு ராஜசேகரன், கவிஞர் நாரண தொல்காப்பியன், டாக்டர் ஏ.எம் அரசு, ஒவியர் சித்திரத் தமிழ்தாசன், பேராசிரியை  திருமதி கஸ்தூரி, திரு ராஜ சிபு, எல் ஐ சி முகவர் திரு ஏ வி சன்முகம், பேரா .ராமசுந்தரம், செந்தில் ஆனநத், குறும்பட இயக்குநர் சி.கிறிஸ்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திரையிடலில்,மனப்பாட முறையின் கேட்டை விளக்கும் 'மக்கப் மங்கம்மா' விளையாட்டும்  கல்வியையும் ஒருசேர பெற்று படிக்கவேண்டிய குழந்தைகள்  குடும்ப பொறுப்பை சுமக்க குழந்தைத் தொழிலுக்கு தள்ளப்டும் நிலை பற்றி 'கிகீ' படம், உயர்ஜாதி தெருவில் செருப்பு அணிய முடியாத கொடுமையின் கனவும் அந்த தீண்டாமைக்கு எதிராக எதிர்க்கும் மனோ தைரியமும்  வெளிப்படுத்தும் எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'குறடு ' சிறுகதையை 'நடந்த கதை' என்ற படம்,மது மோசம் என்று நாயிக்குத் தெரியும் விஷயம் கூட மனிதனுக்குத் தெரிவதில்லையே என்பதை சித்தரிக்கும் 'சென்ஸ்'என்ற படம், பெரியவர்களுக்குத் தெரியாத சில அணுகுமுறைகள் கூட சிறுவர்களுக்கு அமைந்திருப்பதை விளக்கும் 'கிரியா' என்ற படமும் திரையிடப்பட்டன். 
இறுதியாக கொட்டாரம்  தமிழ்நாடு முறபோக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின்  இணைச்செயலாளர் திரு. சி.செல்வன் நன்றியுரை வழங்கினார்.

ஞாயிறு, 13 மே, 2012

குறுந்திரை 2012 புகைப்படங்கள்

2012, மே 12-ம் தேதி நடைபெற்ற குறுந்திரை 2012 -ன் புகைப்பட பதிவுகள் 

நிகழ்வுகளின் மேடை
துவக்கப்பாடல் - இருதயராஜ், தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு

குத்துவிளக்கேற்றல் - மத்தியாஸ் தமுஎகச மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

குத்துவிளக்கேற்றல் - ஜே.எம். ஹசன், தமுஎகச குமரி மாவட்டத் தலைவர்

குத்துவிளக்கேற்றல் - எம். மிக்கேல்ராஜ், தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு
குத்துவிளக்கேற்றல் - உருவங்கள்

வரவேற்புரை - எம். மிக்கேல்ராஜ், தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு

தலைமையுரை - ஜே.எம். ஹசன், தமுஎகச குமரி மாவட்டத் தலைவர்
உரை வீச்சு - எஸ். கருணா, தமுஎகச மாநில துணைச் செயலாளர்
குறும்படம் ஒரு பார்வை
எதிர் நீச்சல் பத்திரிகை வெளியீடு
எஸ். கருணா வெளியிட பேரா. கணேசன் பெற்றுக் கொள்கிறார்

எதிர் நீச்சல் புத்தக அறிமுகம் - ஆசிரியர் ஜாண் இளங்கோ
 பாடல் பாடி சிறப்பித்தவர் - 
 பாடல் பாடி சிறப்பித்தவர் - கே.பி செல்லப்பா
பாடல் பாடி சிறப்பித்தவர் - பகவதி

வாழ்த்துரை - பணி. மரிய இராஜேந்திரன்

வாழ்த்துரை - தக்கலை மா. பென்னி
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
ஆறுதல் பரிசு
 ஆறுதல் பரிசு
ஆறுதல் பரிசு
படைப்பாளிகளின் பகிர்வுகள்
படைப்பாளிகளின் பகிர்வுகள்
 படைப்பாளிகளின் பகிர்வுகள்
 படைப்பாளிகளின் பகிர்வுகள்
 படைப்பாளிகளின் பகிர்வுகள்
படைப்பாளிகளின் பகிர்வுகள்
 நிகழ்ச்சி தொகுப்பாளராக பேரா. கணேசன்
 நிகழ்ச்சி தொகுப்பாளராக - சித்திரம் சிவப்பிரியன் 
நன்றியுரை - சிவஸ்ரீ ரமேஷ்

குறுந்திரை விளம்பரங்கள்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்கள் தமுஎகச குமரி மாவட்ட தக்கலை கிளையும் மணலிக்கரை உருவங்கள் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய குறுந்திரை -2012 என்ற மாநில அளவிலான குறும்பட ஆவணப்படப் போட்டிகள் மே12-ம் தேதி நடைபெற்றது. 
இதனையொட்டி தக்கலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளின் படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 
இவற்றை வடிவமைத்தவர் தக்கலை தமுஎகச கிளை உறுப்பினர் லெனின்பாபு.
புகைப்படங்கள் தக்கலை தமுஎகச கிளை உறுப்பினர் சுபாஷ்.




ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

குறுந்திரை - 2012

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க குமரி மாவட்டக்குழுவும் உருவங்கள் ஊடக ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் குறுந்திரை 2012 என்ற குறும்பட ஆவணப்பட போட்டி மே 12-ம் தேதி தக்கலையில் நடைபெறவுள்ளது.

போட்டிக்கான நிபந்தனைகள்:
1. படங்கள் குறுந்தகடில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
2. போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.250. இதனை உருவங்கள்(URUVANGAL) என்ற பெயரில் டிடி(DD) யாகவோ அல்லது பணவிடையாகவோ (M.O) குறுந்தகடுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனப்ப வேண்டும்.
உருவங்கள்
இமேஜஸ், புலவன்விளை
கல்லன்குழு அஞ்சல்,
குமரி மாவட்டம் – 629 166.
3. சிறந்த இரண்டு குறும்படங்கள், இரண்டு ஆவணப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும்.
4. தேர்வு செய்யப்படும் படங்களுக்கு பரிசாக தலா ரூ.3000, நினைவு பரிசு, புத்தகங்கள் வழங்கப்படும்.
5. தேர்வு செய்யப்படும் படங்கள் விழாவில் திரையிடப்படும்.
6. படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07-05-2012.
ஆர்வமுடையவர்கள் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

தொடர்புக்கு
ஜாண் இளங்கோ - 94423 65316
மிக்கேல்ராஜ் - 94432 49461
ஜெயக்குமார் - 94431 55494

செவ்வாய், 27 மார்ச், 2012

ஏன் வந்தார் வைகுண்டர் (பகுதி - 2)

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவத்தையும் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் இரண்டாம் பாகம்.

ஏன் வந்தார் வைகுண்டர் (பகுதி - 1)

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவத்தையும் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நாகர்கோவிலில் 2012 மார்ச் மாதம் 11-ம் தேதி் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முதற்பாகம்.

வெள்ளி, 23 மார்ச், 2012

கருத்தரங்கம்

நண்பர்களே, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும் தேசிய நாடகப் பள்ளியும் இணைந்து நடத்தும் நாடகக் கலைஞர் பாதல் சர்காரின் நாடக பங்களிப்பு குறித்த தேசிய கருத்தரங்கம் மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது.

இடம்: சுமங்கலி திருமண மண்டபம், மார்த்தாண்டம்.

நாள்: 25-03-2012, ஞாயிற்றுக்கிழமை

புகைப்பட கண்காட்சி திறப்பு: காலை 11.00 மணி
கருத்தரங்கம்: மாலை 2.00 மணி

பங்கேற்பாளர்கள்:
நாடகாசிரியர்: அஸ்வகோஷ்
நாடக செயற்பாட்டாளர்கள்: பிரளயன், அ.மங்கை
சமுதாய அமைப்பிலிருந்து: எம்.ஜி வெங்கடேஷ்
கலை விமர்சகர்: சதானந்த் மேனன்
தேசிய நாடகப் பள்ளி பெங்களூரு மண்டல இயக்குநர்: சுரேஷ் அனஹள்ளி
தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர்
: எஸ். கருணா

தமுஎகச உங்களது பங்கேற்பை வரவேற்கிறது.