இந்திய சினிமாவின் நூற்றாண்டை
கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும்
என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி
வருகிறது.
இதன் ஒருபகுதியாக கொட்டாரத்தில் 2012 ஜூன் 30 ம் தேதி மாலை7 மணி முதல் 8.30 வரை டாக்டர் ராஜசேகரன் வீட்டு வளாகத்தில் திரையிடல் நடைபெற்றது.
இதற்கு கிளைத்தலைவர் திரு ஏ ஆர் ஜே. கண்ணா அவர்கள் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கவிஞர் ஈ.விஜய் அவர்கள் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் க.கணேசன் அறிமுகவுரையுடன் பல குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இத் திரையிடல் நிகழ்ச்சியில் டாக்டர் திரு ராஜசேகரன், கவிஞர் நாரண தொல்காப்பியன், டாக்டர் ஏ.எம் அரசு, ஒவியர் சித்திரத் தமிழ்தாசன், பேராசிரியை திருமதி கஸ்தூரி, திரு ராஜ சிபு, எல் ஐ சி முகவர் திரு ஏ வி சன்முகம், பேரா .ராமசுந்தரம், செந்தில் ஆனநத், குறும்பட இயக்குநர் சி.கிறிஸ்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திரையிடலில்,மனப்பாட முறையின் கேட்டை விளக்கும் 'மக்கப் மங்கம்மா' விளையாட்டும் கல்வியையும் ஒருசேர பெற்று படிக்கவேண்டிய குழந்தைகள் குடும்ப பொறுப்பை சுமக்க குழந்தைத் தொழிலுக்கு தள்ளப்டும் நிலை பற்றி 'கிகீ' படம், உயர்ஜாதி தெருவில் செருப்பு அணிய முடியாத கொடுமையின் கனவும் அந்த தீண்டாமைக்கு எதிராக எதிர்க்கும் மனோ தைரியமும் வெளிப்படுத்தும் எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'குறடு ' சிறுகதையை 'நடந்த கதை' என்ற படம்,மது மோசம் என்று நாயிக்குத் தெரியும் விஷயம் கூட மனிதனுக்குத் தெரிவதில்லையே என்பதை சித்தரிக்கும் 'சென்ஸ்'என்ற படம், பெரியவர்களுக்குத் தெரியாத சில அணுகுமுறைகள் கூட சிறுவர்களுக்கு அமைந்திருப்பதை விளக்கும் 'கிரியா' என்ற படமும் திரையிடப்பட்டன்.
இறுதியாக கொட்டாரம் தமிழ்நாடு முறபோக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் திரு. சி.செல்வன் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக