செவ்வாய், 3 ஜூலை, 2012

குமரியில் திரைப்பயணம் 2


மார்த்தாண்டம் கல்லூரியில் தமுஎகச குறும்பட திரையிடல்

  கல்லூரி முதல்வர் ராய் பேசுகிறார்
  கல்லூரி பேராசிரியர் குமாரசெல்வா பேசுகிறார்
தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
மிக்கேல்ராஜ் பேசுகிறார்

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும் என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறையோடு இணைந்து இந்த திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தமிழ்துறைத் தலைவர் மகிழ் உல்டா கமலம் தலைமை தாங்கினார். பேராசிரியர் குமார செல்வா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராய் வாழ்த்துரை வழங்கினார். தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் குறுந்திரை ஒரு பார்வை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து சென்ஸ், நடந்த கதை, அஃறிணைகள், கிரியா, என்கண்ணே, காற்றில் அலையும் கேள்விகள் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்கள் குறித்து விவாதமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் முதுநிலைத்துறை தலைவர் பிறீடா மேபல் ராணி, பேராசிரியர்கள் சஜன், ஸ்டீபன்சன், தமுஎகச குமரி மாவட்டத் துணைச்செயலாளர் விடியல் குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக