வெள்ளி, 27 மே, 2011

தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது.

விதிமுறைகள்

Ø சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.

Ø சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Ø சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும் சொந்தக் கற்பனையில் உருவானவையாக இருப்பதோடு அதற்கான உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Ø கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம்.

Ø ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம்.

Ø போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

Ø கடைசி தேதி ஜூன் மாதம் 4-ம் தேதி.

Ø போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும்.

Ø போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.

முதல் பரிசு ரூ.10,000

2-ம் பரிசு ரூ.5,000

3-ம் பரிசு ரூ.2,500

5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி

தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி,

தினமணி நாளிதழ்,

எண்-29, 2-வது பிரதான சாலை,

அம்பத்தூர் தொழிற்பேட்டை,

சென்னை-600058.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக